Kathir News
Begin typing your search above and press return to search.

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை.. தேர்தல் ஆணையம் இன்று வெளியீடு.!

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை.. தேர்தல் ஆணையம் இன்று வெளியீடு.!

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை.. தேர்தல் ஆணையம் இன்று வெளியீடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jan 2021 9:57 AM GMT

நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளை நிறத்தில் அடையா அட்டை வழங்கியிருந்தது. இதன் பின்னர் அதனை கலராக வெளியிட்டது. தற்போது மீண்டும் மின்னணு முறையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது.

இன்று ஜனவரி 25ம் தேதி 11வது தேசிய வாக்காளர் தினம் கடைப்படிக்கப்படுகிறது. இதனையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் முறையில் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிடுகிறது.

இந்த அட்டையில் க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்படுகிறது. டெல்லியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி வாயிலாக கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஹலோ வாக்காளர்கள் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவை அவர் துவக்கி வைக்கிறார். இதன் பின்னர் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்குகிறார். இதில் தலைமை தேர்தல் அதிகாரி உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News