உத்தரகாண்டில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: நடு ஆற்றில் தனியாக மாட்டிக் கொண்ட யானை !
வடமாநிலங்களில் ஒன்றாக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
By : Thangavelu
வடமாநிலங்களில் ஒன்றாக உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
இந்நிலையில், உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி கௌலா ஆற்றின் நடுவே யானை ஒன்று சிக்கியுள்ளது. அங்கு வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் யானையை மீட்கும் பணி சற்று தொய்வு அடைந்துள்ளது. இருந்தபோதிலும் யானையை உயிருடன் மீட்க வனத்துறை தொடர்ந்து போராடி வருகிறது.
ஏற்கனவே மழையால் பாதிப்படைந்த பகுதிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் பார்வையிட்டார். மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக அம்மாநில முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: ETV Bharat