புதுவை: ஹிந்து முறைப்படி கோவிலுக்கு சென்று மணம் செய்து கொண்ட ஐரோப்பிய தம்பதியினர் - கிராமவாசிகள் வாழ்த்து.!
புதுவை: ஹிந்து முறைப்படி கோவிலுக்கு சென்று மணம் செய்து கொண்ட ஐரோப்பிய தம்பதியினர் - கிராமவாசிகள் வாழ்த்து.!

By : Rama Subbaiah
புதுவை மாநிலம் வானூருக்கு அருகே ஆரோவில் எனப்படும் பன்னாட்டு மக்கள் குடியிருப்பு மையம் உள்ளது. இங்கு உலக மாதாவை வழிபட்டுக் கொண்டு பல நாட்டு மக்கள் இங்குள்ள இயற்கை சூழலை ரசித்தவாறு வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கிராமத்துக்கு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யான் லூஸ்லி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வந்து இங்கேயே வந்து நிரந்தரமாக தங்கினார்.
அப்போது அவருக்கு பிரெஞ்சு-ஜெர்மன் பெண்ணான சி அரோரே மாபிலாட்டுடன் பழக்கமானார். நாளடைவில் காதலாக மாறி திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர். ஹிந்து முறைகளில் ஏற்கனவே ஆர்வப்பட்ட அவர்கள் அந்த முறையிலேயே கோவிலுக்கு சென்றுமாலை மாற்றிக் கொண்டு மணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
நேற்று வானூருக்கு அருகிலுள்ள கோடூர் கிராமத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். கிராமவாசிகள் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். விழாவுக்குப் பிறகு, அனைத்து விருந்தினர்களுக்கும் இந்து மரபுகள் பற்றிய பரிசு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் விருந்தினர்கள் அனைவருக்கும் சைவ உணவு வழங்கப்பட்டது.
மணப்பெண் அராரே கூறுகையில்" “நாங்கள் சிவபெருமானின் பக்தர்கள். இந்த நிலத்தின் மரபுகள் மற்றும் உணவு கலாச்சாரம் எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டன. எங்கள் வீட்டு நுழைவாயிலில் ஒரு விநாயகர் சிலையும், எங்கள் பூஜை அறையில் இன்னும் பல இந்து கடவுளின் சிலைகளும் உள்ளன.” என்று திருமணத்திற்குப் பின் அரோரே கூறினார்.
இந்து முறைப்படி வெளிநாட்டு ஜோடி திருமணம் செய்துகொண்டது உள்ளூர்வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
