உலகம் நெருக்கடியை சந்தித்தாலும், இந்தியா வளர்ச்சியை எட்டி வருகிறது - விசாகப்பட்டினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
'உலகம் நெருக்கடியை சந்திக்கிறது ஆனால் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By : Mohan Raj
'உலகம் நெருக்கடியை சந்திக்கிறது ஆனால் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சாலை விரிவாக்கம், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, 'விசாகப்பட்டினம் துறைமுகம் இங்கு நீண்ட வரலாற்றைக் கொண்டது, இங்கிருந்து உலகம் முழுவதும் வணிகம் நடைபெற்றுள்ளது தற்போது உலகத்தை இந்தியாவிலேயே இணைக்கும் முக்கிய புள்ளியாக விசாகப்பட்டினம் திகழ்கிறது' என்றார்.
மேலும் பேசிய அவர், 'உலகம் நெருக்கடியை சந்தித்தாலும் இந்தியா பல்வேறு துறைகளில் முக்கிய மைல்கள் எட்டி சாதனை வரலாற்றை எழுதி வருகிறது' என கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த நூற்றாண்டின் விழாவின் போது அடைந்திருக்க வேண்டிய இடங்களை நோக்கி நான் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அதிக சிரமங்கள் இருந்தாலும் நாடு பெருமளவு கஷ்டப்பட்டது இதனை கருத்தில் கொண்டு அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வருவதன் காரணமாக தற்போது நிலைமை மேம்பட்டுள்ளது' எனவும் பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பங்கேற்றனர்.