Kathir News
Begin typing your search above and press return to search.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மருமகள் குழந்தை கடத்தலில் முக்கியப் புள்ளி!

பல ஆண்டுகளாக குழந்தை கடத்தும் மற்றும் விற்பனை செய்து வந்த கூட்டம் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளது. அதிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரின் மருமகளும் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  பிரமுகரின் மருமகள் குழந்தை கடத்தலில் முக்கியப் புள்ளி!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 Dec 2021 4:31 AM GMT

பல ஆண்டுகளாக குழந்தை கடத்தும் மற்றும் விற்பனை செய்து வந்த கூட்டம் போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளது. அதிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரின் மருமகளும் இதில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கம், கொல்கத்தா தலைநகர் ஹவுரா அருகாமையில் உள்ள சல்கியா என்ற பகுதியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த காப்பகத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் 9 வயது சிறுமியை ஒரு தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இதனிடையே வளர்ப்பு பெற்றோர்களிடம் சிறுமி தான் வளர்ந்த காப்பகத்தில் நான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது தொடர்பாக ஹவுரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இது தொடர்பாக போலீசார் மற்றும் சிறப்பு புலனாய்வு அமைப்புகள் குழந்தைகள் காப்பகத்தில் விசாரணை நடத்தியது. இதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளது. காப்பகத்தில் இருக்க வேண்டிய குழந்தைகளை விட கூடுதலான குழந்தைகள் இருந்துள்ளனர்.

இது பற்றி குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகியான கீதா ஸ்ரீயிடம் போலீசார் விசாரித்ததில் உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் குழந்தைகள் ஒரு வேலை கடத்தி வந்திருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் கீதாஸ்ரீயை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். குழந்தைகளை வேறு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை கடத்தலில் கீதாஸ்ரீ திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் ஹவுரா பெண் துணை மேயர் மருமகள் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கீதாஸ்ரீயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வேளை பெண் துணை மேயருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தை கடத்தல் சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: News 18 TamilNadu

Image Courtesy: Edexlive


Next Story
கதிர் தொகுப்பு
Trending News