Kathir News
Begin typing your search above and press return to search.

19 வயது தலித் சிறுமி கழுத்து நெரித்து எரித்து கொலை - முன்னாள் காதலன் கைது!

19 வயது தலித் சிறுமி கழுத்து நெரித்து எரித்து கொலை - முன்னாள் காதலன் கைது!

19 வயது தலித் சிறுமி கழுத்து நெரித்து எரித்து கொலை - முன்னாள் காதலன் கைது!
X

Saffron MomBy : Saffron Mom

  |  24 Dec 2020 8:47 PM IST

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் 19 வயது தலித் சிறுமி தனது முன்னாள் காதலனால் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளியை தற்போது காவல்துறை கைது செய்து செய்துள்ளது.

காவல்துறையின் அறிக்கையின் படி, சிறுமி ஸ்நேஹலாத குற்றவாளி குட்டி ராஜேஷ் உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். பின்னர் தனக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை கிடைத்த பின்பும் அவருடன் இருந்த தொடர்பை ஸ்நேஹலாத நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் கல்லூரி நண்பருடன் நெருங்கிப் பழகிவந்துள்ளார். அதில் கோபமடைந்த ராஜேஷ் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். இருவரும் கடந்த ஒரு வருடங்களாக 1,618 முறை அலைப்பேசியில் பேசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று ராஜேஷ் ஸ்நேஹலாதவை பைக்கில் அழைத்துச் சென்று பதனபள்ளியில் பகுதியில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கோபமடைந்து அவரை கொலை செய்து பின்னர் அவளது அடையாளத்தை அளிக்க அவரை எரித்துள்ளார். பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்று காவல்துறை மூத்த அதிகாரி பூசரபு சத்யா யேசு பாபு கூறினார்.

பின்னர் காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்குத் தெரிவித்தது. அவரது சடலம் அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து 25 Km தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது . பெண்ணின் குடும்பத்தினர் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவர் மீதும் குற்றம்சாட்டியுள்ளனர். ராஜேஷ் விசாரணை செய்யப்பட்டார் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொன்றார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News