Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  29 April 2021 5:39 PM IST

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிரமாக வீசி வருகிறது. இதில் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். பல லட்சம் பேர் குணமடைந்து வருகின்றனர்.





இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டிருந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மன்மோகன் சிங் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News