Kathir News
Begin typing your search above and press return to search.

ஞானவாபி மசூதியில் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி! வழக்கு நடைபெறும் போதே அட்டூழியம்!

ஞானவாபி மசூதியில் இந்து அடையாளங்களை அழிக்க முயற்சி! வழக்கு நடைபெறும் போதே அட்டூழியம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 May 2022 5:36 AM IST

சிவலிங்கம் போன்ற அமைப்பு ஞானவாபி மசூதியில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மேல் துளையிட்டு அதன் தன்மையை மாற்றும் முயற்சி நடந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மசூதிக்குள் காணப்படும் வட்ட வடிவ அமைப்பே நீரூற்று என முஸ்லிம்கள் கூறி வருகின்றனர். இருப்பினும்,அதில் சிவலிங்கம், தாமரை, ஸ்வஸ்திகா, கலசம் மற்றும் திரிசூலம் போன்ற சின்னங்கள் மசூதி சுவர்களில் கோயிலின் சான்றுகள் இன்னும் காணப்படுகின்றன.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் போது மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கட்டமைப்பின் மேல், வெள்ளை சிமென்ட் கல் போடப்பட்டு அதன் மீது கோடுகள் வரையப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. 2.5 அடி வட்ட வடிவில் ஒரு துண்டாக இருந்ததாகவும், அதற்கு மேல் வெவ்வேறு நிறத்தில் வேறு கல் வைக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது.

சர்வேயின் போது கூட இருந்தவர், சிவலிங்கம் கருப்பு நிறத்தில் இருப்பதாகவும், மேல் பகுதி அசல் கட்டமைப்பின் தன்மையை மாற்ற ஒரு சிமென்ட் அடுக்கு போடப்பட்டதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் இந்து தரப்பில் ஆஜரான விஷ்ணு ஜெயின், சிவலிங்கத்தின் மீது கண்டெடுக்கப்பட்ட துளை முஸ்லிம்களால் செய்யப்பட்டது என்று கூறினார். சில மந்திரங்கள் இருந்ததாகவும், ஆனால் அவை கீறப்பட்டதாகவும் சர்வே ரிப்போர்ட் கூறுகிறது. இது கோவில் இடம் என்ற இந்து தரப்பின் கூற்றுக்கு முட்டுக்கட்டை போட ஆதாரங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது.

Inputs From: Times Now

Next Story
கதிர் தொகுப்பு
Trending News