கனரக வாகனங்களுக்கான சான்றுகள் புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.!
நாடு முழுவதும் உள்ள கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள் மற்றும் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

By : Thangavelu
நாடு முழுவதும் உள்ள கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள் மற்றும் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சமயங்களில் வாகன உரிமம் புதுப்பித்தல் மற்றும் லைசென்ஸ் புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனை போக்கும் வேளையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் துன்பப்பட்டுள்ள மக்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் மற்றும் ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை காலஅவகாசம் அளித்துள்ளது. இந்த நேரங்களில் வாகன உரிமம், லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் புதுப்பித்துக்கொள்ள மத்திய அரசு காலஅவகாசம் வழங்கியுள்ளது.