Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் இருக்கும் போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய அமைச்சர் தகவல் !

இந்தியாவில் இருக்கும் கோவில் பல்கலைக்கழகங்களின் பெயர்களின் பட்டியல்.

இந்தியாவில் இருக்கும் போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய அமைச்சர் தகவல் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Aug 2021 1:24 PM GMT

மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது ஆகும். குறிப்பாக கல்லூரிகளில் கிடைக்கும் கல்வியறிவு மூலம் அவர்களது எதிர்காலம் வலுப்படுகிறது. ஆனால் போலியாக செயல்படும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் கல்வியை ஒரு கேள்விக் குறியாக்கி வருகிறது. எனவே அவற்றைப் பட்டியலிட்டு வழங்குவதன் மூலம் போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களை அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் தற்பொழுது 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதாக UGC எனப்படும் பல்கலை மானியக் குழு கண்டறிந்துள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் கருத்தை தெரிவித்துள்ளார்.


மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறுகையில், மாணவர் பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை UGC கண்டறிந்துள்ளது. UGC-யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.


இதில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 8 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் டெல்லியில் 7 பல்கலைக்கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Input: https://www.ndtv.com/india-news/24-universities-declared-fake-most-from-up-education-minister-dharmendra-pradhan-2500923

Image courtesy:NDTV news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News