புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து ட்ராக்ட்டரில் படையெடுக்கும் விவசாயிகள்!
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து ட்ராக்ட்டரில் படையெடுக்கும் விவசாயிகள்!

தற்போது டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வருவது ஒருபுறம் இருந்தாலும் அந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பல விவசாயிகள் தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குத் தந்து கொண்டே இருக்கின்றனர். காசியாபாத் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
அவர்கள் திங்களன்று உத்தரப் பிரதேசம் வழியாகத் தலைநகரை அடைய 300 டிராக்டர்களில் பேரணி நடத்தினர். இருப்பினும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஹிந்த் மஜ்தூர் கிசான் சமிதி(HMKS) அமைப்பின் சார்பாக ஐந்து பேர் மட்டும் அனுப்பப்பட்டனர். அவர்கள் திங்களன்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
दशकों पुरानी मांग पूरी होने की खुशी में किसानों ने मेरठ से गाजियाबाद तक हज़ारों ट्रैक्टरों पर सवार हो कर कृषि बिल के समर्थन में रैली निकाली है।
— Swatantra Dev Singh (@swatantrabjp) December 21, 2020
(यह वीडियो देख कर कांग्रेसियों और दलालों को पीढ़ा होना स्वाभाविक है)#ModiWithFarmers pic.twitter.com/XpLkcCMQm6
இது குறித்துப் பேசிய HMKS செயலாளர் சதிஷ்குமார், "நாங்கள் நரேந்திர சிங் தோமரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். புதிய வேளாண் சட்டங்களுக்கு எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். நாங்கள் குறைந்த விலைக்கு எங்கள் ஆதரவையும் மற்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பதற்கான ஆதரவை வழங்குகிறோம்," என்று கூறினார்.
மேலும், "தற்போது ஆர்ப்பாட்டம் நடத்திவருபவர்களுக்குப் பின்னால் எதிர்க் கட்சிகள் இருக்கின்றனர். பிரதமர் பலமுறை இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிர்ப்பாக இருக்காது என்று கூறியபோதும் அவர்கள் எதிர்ப்புகளைத் தொடங்கவில்லை. அவர்களும் எங்களையும் போன்ற விவசாயிகள் என்பதால் தனிப்பட்ட வேறுபாடுகள் இல்லை," என்று குமார் கூறினார்.
மேலும்,"எங்களுக்கு இருக்கும் மின்சார மசோதா தள்ளுபடி, பயிர்களைச் சரியான நேரத்தில் விளைவிப்பதற்குப் பயிர்களை வாங்குவது மற்றும் அதற்கான ஊதியத்தைச் சரியான நேரத்தில் பெறுவதற்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்," என்பதையும் கூறினார்.
மேலும் வேளாண் சட்டங்கள் சட்டங்கள் குறித்து நொய்டா விவசாயிகளிடம் பேசிய பொழுது, "இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது," என்று கூறினர். மேலும் இதனை எதிர்த்துப் போராடியவர்கள் இந்த சட்டத்தைத் திரும்பப்பெற இரண்டு ஆண்டுகள் காத்திருப்போம் என்று கூறியதற்கு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் விவசாயிகள், "இதற்கு ஆதரவளித்து ஐந்து ஆண்டுகள் வரை அமர்ந்திருக்கத் தயார்," என்று வெளிப்படுத்தினர்.