அட சூப்பர்.. குறைந்தபட்ச ஆதரவு விலை.. 1.12 கோடி விவசாயிகள் பயன்..
குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 1.12 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
By : Bharathi Latha
2022-23 ஆம் ஆண்டில் கரீப் சந்தைப் பருவத்தில் நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.59 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. 1.12 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் பயனடையும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் நெல் கொள்முதல் கொள்கையை அரசு கடைப்பிடித்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே இந்த தொகை வரவு வைக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடப்பு 2022-23 கரீப் சந்தைப் பருவத்தில் 22.05.2023 வரை 520.63 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,59,659.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 1,12,96,159 விவசாயிகள் பயனடைந்துள்னர். எஃ.ப் சி ஐ எனப்படும் இந்திய உணவுக் கழகம், மாநில அரசின் அமைப்புகளுடன் இணைந்து நெல் கொள்முதல் பணிகளை மேற்கொள்கிறது. கொள்முதல் நடவடிக்கைகளின் பெரும் பகுதி மாநில அரசுகள் மற்றும் அவற்றின் அமைப்புகளைச் சார்ந்ததாகும்.
மத்திய அரசு கொண்டுவந்த குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் ஆன நெல் கொள்முதல் தற்போது விவசாயிகள் மத்தியில் தங்களுக்கு போதுமான வருமானத்தை ஏற்படுத்தி தருவதாக அமைந்து இருக்கிறது. வெளிப்படையான தன்மையாகவும் இது இருக்கிறது மற்றொரு சிறப்பு அம்சம். இந்த வருடத்தில் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 1,59,659.59 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 1,12,96,159 விவசாயிகள் பயனடைந்துள்னர்.
Input & Image courtesy: News