புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள்.!
புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள்.!

இதன்மூலம் பயனடைந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன்னுடைய விளைபொருட்களை குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய்க்கு விற்றதாகவும் மற்றும் ஒரு குவிண்டாலுக்கு ஆதரவு விலையாக 1,800 பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதவிர, புதிய சட்டங்களைத் தனது நேரத்தை மிச்சப்படுத்தியதோடு போக்குவரத்துக்குச் செலவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதே போன்று பயனடைந்த மற்றொரு விவசாயி, புதிய மூன்று விவசாய சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனையாளர்களுக்கு நேரடியாக தாங்கள் நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய முடிகின்றது என்று தெரிவித்துள்ளார்.
राजस्थान और MP के किसान तो @narendramodi सरकार के नए केंद्रीय कृषि क़ानूनों का समर्थन कर रहे हैं. ज़रा उनकी राय भी तो सामने आए..ये भी तो हमारे अन्नदाता हैं..आंदोलनरत किसानों के एक पक्ष को तो आप लगातार सुन रहे हैं. अब @TV9Bharatvarsh पर दूसरा पक्ष भी सुनिएpic.twitter.com/2UVjwLb4Jo
— Samir Abbas (@TheSamirAbbas) December 5, 2020
"முன்னர், மாதிரிக்காக மட்டும் மண்டிகளுக்கு 10 kg தானியங்களை அனுப்பப்பட்டன. விளைபொருட்களை விற்கப் பல நாட்கள் எடுக்கப்படும். இது போக ஏற்றுமதிக்கான போக்குவரத்து செலவையும் மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களுக்கான உரியப் பணத்தைப் பெறப் பல நாட்கள் மற்றும் மாதங்கள் காத்திருக்க வேண்டும். இருப்பினும் சட்டங்கள் அமல்படுத்திய பின்பு, தொழிலதிபர்கள் நேரடியாக வந்து முன்பணம் செலுத்திப் பெறுகின்றனர். MSD க்கு பணம் பெறுவது தவிரப் போக்குவரத்துக்குச் செலவு மற்றும் நேரமும் மிச்சப்படுத்தப்படுகின்றது," என்று ஒரு விவசாயி தெரிவித்தார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் கலந்து கொள்ளவில்லை. TV9 பரத்வர்ஷின் அறிக்கையில், ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் புதிய வேளாண் சட்டங்களுக்காகப் பிரதமருக்காக நன்றி தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்துவரும் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்துப் பேசிய மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் விவசாயிகள், அவர்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் காங்கிரஸ் அரசியல்வாதிகளால் முட்டாளாக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தனர். மேலும் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனுள்ளவை என்றும் அவர்கள் கூறினர்.
"நாங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் அனைவரும் புதிய விவசாய சட்டங்கள் குறித்த பயன் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்து அறியாத விவசாயிகள். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் அவர்கள் தூண்டப்பட்டுள்ளனர்," என்று TV9 பரத்வர்ஷின் பேட்டியெடுத்த விவசாயி ஒருவர் தெரிவித்தார்.