Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : 3 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு.!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : 3 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு.!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : 3 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அமித்ஷா அழைப்பு.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  29 Nov 2020 2:47 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப் மாநில விவசாயிகள், சில ஹரியானா மாநில விவசாயக் குழுக்களுடன் இணைந்து 'டெல்லி சலோ' என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நவ.26-ம் தேதியில் இருந்து 3 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதாலும் அங்குள்ள அரசியல்வாதிகள் விவசாயிகளிடம் பொருட்கள் வாங்கி விற்கும் இடைநிலை தரகர்கர்களாக இருப்பதாலும் விவசாயிகளுக்கு புதிய சந்தையை உருவாக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பஞ்சாப் அரசுடன் எதிர் கட்சியும் அங்கு கைகோர்த்துள்ளது. இவர்களால் தூண்டி விடப்படும் இந்த போராட்டம் கடந்த இரு மாதங்களாக மும்முரமாக நடைபெறவில்லை.

இந்த நிலையில் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது, மற்ற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியால் கிட்டத்தட்ட காங்கிரஸ் காணாமலே போய்விட்டது. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் அங்குள்ள அரசியல் வாதிகள் மீண்டும் கடந்த நான்கு நாட்களாக களம் இறங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் விவசாயிகளின் குழுவைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் போலீஸார் தண்ணீர் பீய்ச்சிகளை பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர். மூன்றாவது வது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. சோனிப்பேட் பகுதியில் குழுமி இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சிகள் மூலம் நீர் பாய்ச்சப்பட்டது.

எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல்துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர். விவசாயிகள் போரட்டத்தால் ரோட்டர்- ஜஜ்ஜார் எல்லை, டெல்லி- குருகிராம் எல்லை, டெல்லி- ஜம்மு நெடுஞ்சாலை ஆகிய பகுதிக்ளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளதை போராட்டக்காரர்கள் ஏற்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News