Kathir News
Begin typing your search above and press return to search.

வேளாண் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்கனும்.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.!

வேளாண் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்கனும்.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.!

வேளாண் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை விவசாயிகள் படிக்கனும்.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Dec 2020 1:05 AM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வருகிறது. குறிப்பாக வேளாண் சட்டங்களால் குறைந்த பட்ச ஆதார விலைக்கு எந்த பாதிப்பு இல்லை என வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். பிரதமர் மோடியும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்த நிலையில், மீண்டும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தமிழில் குறிப்பிட்டுள்ளதாவது:

வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News