Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் முன்னாள் காஷ்மீர் தலைவர்கள் - தலிபான் ஆட்சியில் ஆப்கான் மிளிருமாம் !

Farooq Abdullah, Mehbooba Mufti bat for Taliban, say they hope Taliban will run govt as per Islamic sharia laws

சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் முன்னாள் காஷ்மீர் தலைவர்கள் - தலிபான் ஆட்சியில் ஆப்கான் மிளிருமாம் !

Abdullah and Mufti batted for Taliban government (Image: News18/KashmirWallah)

MuruganandhamBy : Muruganandham

  |  9 Sep 2021 10:12 AM GMT

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தேசிய காங்கிரஸ் தலைவர் பரூக் அப்துல்லா, என்சி தலைவர் ஒமர் அப்துல்லா மற்றும் ஜம்மு -காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் தலிபான்களுக்கு ஆதரவாக பேசினர். ஆப்கானிஸ்தானில் ஜிஹாதி ஆட்சி நடப்பதை ஆதரித்துள்ளனர்.

தலிபான்கள் நல்லாட்சிக்கு வழிவகுப்பார்கள் என அப்துல்லா நம்புகிறார். அவர், "ஆப்கானிஸ்தான் ஒரு தனி நாடு. இப்போது ஆட்சிக்கு வந்தவர்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும். அவர்கள் அனைவருக்கும் நீதி வழங்குவார்கள். ஒரு நல்ல அரசாங்கத்தை நடத்துவார்கள் என்று நம்புகிறேன், அதில் அவர்கள் மனித உரிமைகளை மதித்து இஸ்லாமிய சட்டங்களின்படி அரசாங்கத்தை நடத்துவார்கள். அவர்கள் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேண முயற்சிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு பாஜக ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, "சர்வதேச உறவுகள் குறித்தும் பிற நாடுகளின் விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதும் முன்னாள் முதல்வரின் வேலை அல்ல என்பதை அப்துல்லா உணர வேண்டும். இது வெளிவிவகார அமைச்சின் வேலை, "மேலும் இது போன்ற கருத்து தெரிவிப்பதைத் நிறுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற வசதியாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்காக உமர் அப்துல்லா சமீபத்தில் அரசாங்கத்தை கடுமையாக சாடினார். அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக இருந்தால், நீங்கள் ஏன் அவர்களிடம் பேசுகிறீர்கள்? அவர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லையென்றால், நீங்கள் ஏன் அவர்களின் வங்கி கணக்குகளை தடை செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் அவர்களின் அரசை அங்கீகரிக்கவில்லை? தலிபான்கள் பயங்கரவாதிகளாக கருதப்படாவிட்டால், தலிபான்களின் கறுப்புப் பட்டியலை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வுக்கு மோடி அரசு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News