Kathir News
Begin typing your search above and press return to search.

2021-24-ம் ஆண்டில் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்! வளர்ச்சியை கண்டு பிரம்மிக்கும் உலக நாடுகள்!

FASTEST GROWING MAJOR ECONOMY IN THE WORLD DURING 2021-24

2021-24-ம் ஆண்டில் உலகில் வேகமாக வளரும்  பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்! வளர்ச்சியை கண்டு பிரம்மிக்கும் உலக நாடுகள்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Feb 2022 2:24 AM GMT

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மதிப்பீடுகளின் படி, 2021-24-ம் ஆண்டில் உலகில் வேகமாக வளரும் பெரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டில் 8.0-8.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை இந்தியா எட்டும். பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி அமைப்பு நல்ல நிலையில் உள்ளதால் தனியார் துறை முதலீடு வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன என இது கூறுகிறது.

2021-22ல் இந்தியப் பொருளாதாரம் 9.2% வளர்ச்சி அடையும். முந்தைய ஆண்டில் 3.6% ஆக இருந்த விவசாய வளர்ச்சி 2021-22-ல் 3.9% வளர்ச்சி அடையும். 2020-21 ஆம் ஆண்டில் 7% தொய்வில் இருந்து 2021-22-ம் ஆண்டில் 11.8% ஆக வளரும் வகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைத் தொழில்துறை எட்டவுள்ளது. கடந்த ஆண்டு 8.4% சரிவைச் சந்தித்த சேவைகள் துறை 2021-22-ல் 8.2% வளர்ச்சியை எட்டும்.

அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 டிசம்பர் 31-ல் 634 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, 13 மாத இறக்குமதிகளுக்கு சமமாகவும், நாட்டின் வெளிப்புறக் கடனை விட அதிகமாகவும் இது உள்ளது. 2021-22-ல் 15% வலுவான வளர்ச்சியை, முதலீடுகள் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 டிசம்பரில் நுகர்வோர் விலைக் குறியீடு ஒருங்கிணைந்த பணவீக்கமான 5.6%, சகிப்புத்தன்மை இலக்கு வரையறைக்குள் உள்ளது. பெருந்தொற்றுக்கு இடையிலும் மூலதனச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது; 2021 ஏப்ரல்-நவம்பரில் 75 ஐபிஓ வெளியீடுகள் மூலம் ரூ 89 ஆயிரம் கோடிக்கு மேல் திரட்டப்பட்டது, கடந்த தசாப்தத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இது அதிக அளவு ஆகும். மேக்ரோ-பொருளாதார நிலைத்தன்மை குறிகாட்டிகள் இந்தியப் பொருளாதாரம் நன்றாக உள்ளதாக பரிந்துரைக்கின்றன.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News