Kathir News
Begin typing your search above and press return to search.

21 ஆம் நூற்றாண்டில் மேப்பிங் துறையில் ஒரு மைல்கல்! மத்திய அரசு அறிவிப்பு!

21 ஆம் நூற்றாண்டில் மேப்பிங் துறையில் ஒரு மைல்கல்! மத்திய அரசு அறிவிப்பு!

21 ஆம் நூற்றாண்டில் மேப்பிங் துறையில் ஒரு மைல்கல்! மத்திய அரசு அறிவிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Feb 2021 5:19 PM GMT

ஆத்மனிர்பர் பாரத் பற்றிய இந்தியாவின் பார்வையையும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் குறிக்கோளையும் அடையவும் இந்தியாவிற்கு உதவியாக புவியியல் தரவு மற்றும் மேப்பின் துறையில் பலமான முன்னேற்றம் தேவைப்படுகின்றது. அந்த வகையில் தற்போது மேப்பிங் துறையில் கவனம் செலுத்தும் விதமாக, இந்திய அரசாங்கம் மேப்பிங் துறையில் பல்வேறு புதிய அம்சங்களை பொருத்தியுள்ளது. அதன் முதல் படியாக மேப் மை இந்தியாவுடன் தற்போது இஸ்ரோ களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மேப்பிங் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதனால் அவர்களால் தாராளமாக செயல்பட முடியவில்லை. மேலும் அவர்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை உட்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என்று அறிந்தார். அதற்கு பிறகு தற்போது இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி தாராளமயம் ஆக்கப்பட்ட கொள்கையை தற்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்த பிரதமர் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "டிஜிட்டல் இந்தியாவுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை வழங்கும் ஒரு முடிவை எங்கள் அரசாங்கம் எடுத்துள்ளது. புவிசார் தகவல்களை பெறுவதையும், உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்தும் கொள்கைகளை தாராளமயமாக்குவது ஒரு ஆத்மனிர்பர் பாரதத்திற்கான எங்கள் பார்வையில் ஒரு பெரிய படியாகும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதன் மூலம் நாம் வெளிநாட்டில் பயன்பாடுகள் ஆன கூகுள் மேப் மற்றும் கூகுள் எர்த் போன்றவைகளை சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் கிடையாது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள மேப் மை இந்தியாவுடன் ஒரு வலுவான தொடர்பை உருவாக்க முடியும். இதன் மூலம் நம்முடைய தனிப்பட்ட விவரங்களை கூட நாம் பாதுகாப்பாக வைத்து இருக்கலாம்.

இந்தியாவின் மேப்பிங் கொள்கையில், குறிப்பாக இந்திய நிறுவனங்களுக்கு பெரும் மாற்றங்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்து வருகிறது. இந்த கொள்கை இந்திய கண்டுபிடிப்பாளர்களுக்கு மேப்பிங்கில் கணிசமான முன்னேற்றங்களை உருவாக்க உதவும், இறுதியில் நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது மற்றும் சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தியா ஒரு மேப்பிங் சக்தியாக உருவெடுத்து, இந்தியாவின் அடுத்த தலைமுறை சுதேச வரைபடங்களை உருவாக்கி, இந்த புதிய தொழில்நுட்பங்களை உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதை இந்திய அரசாங்கம் உறுதி செய்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News