ஹாப்பி நியூஸ் - இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல்!
ஹாப்பி நியூஸ் - இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல்!
By : Bharathi Latha
கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு நேற்று தனது பரிந்துரையை வழங்கிய பின்னர் இன்று முறையான ஒப்புதல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 1 ஆம் தேதி, கோவிஷீல்ட் அவசரகால பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று கோவாக்சின் அவசர கால பயன்பாடிற்கு பரிந்துரைக்கப்பட்டது.
இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு அளவுகளில் நிர்வகிக்கப்பட்டு 2 முதல் 8 டிகிரியில் சேமிக்கப்படும் என்று சோமானி கூறினார். மேலும் மற்றொரு தடுப்பூசியை சோதனை செய்து வரும் காடிலா நிறுவனத்திற்கு மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கும் ஒப்புதல் அளித்தது.
"சிறிதளவு பாதுகாப்பு குறைபாடு இருந்தால் கூட நாங்கள் ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 100% பாதுகாப்பானவை. அதே நேரத்தில் லேசான காய்ச்சல், வலி மற்றும் ஒவ்வாமை போன்ற சில பக்க விளைவுகள் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் பொதுவானது" என வி.ஜி சோமானி கூறினார்.