Kathir News
Begin typing your search above and press return to search.

மாவோயிஸ்ட்களுக்கு எதிரான CRPF ன் COBRA படையில் பெண் வீராங்கனைகள்.!

மாவோயிஸ்ட்களுக்கு எதிரான CRPF ன் COBRA படையில் பெண் வீராங்கனைகள்.!

மாவோயிஸ்ட்களுக்கு எதிரான CRPF ன் COBRA படையில் பெண் வீராங்கனைகள்.!

Saffron MomBy : Saffron Mom

  |  21 Jan 2021 4:31 PM GMT

தற்போது நாட்டில் அதிகரித்து வரும் மாவோயிஸ்ட்களுக்கு எதிராகப் பல முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதே போன்று ஆண்களைப் போன்று பெண்களும் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முதல் முயற்சியாக மாவோயிஸ்ட்களுக்கான எதிரான போராட்டத்தில் மத்திய பாதுகாப்புப் படையில்(CRPF) கோப்ரா பட்டாலியனில் பெண் வீராங்கனைகளைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று முயற்சி மாவோயிஸ்ட்களுக்கு எதிரான போராட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது முதல் முறையாகும்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் ஓய்வு பெறவிருக்கும் CRPF யின் இயக்குநர் A P மகேஸ்வரி, கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தின் முதல்முறையாக ஊடகத்துக்கு உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "நாங்கள் நக்சல் எதிர்ப்பு படையான COBRA படையின் பெண் வீராங்கனைகளைச் சேர்க்க முடிவெடுத்துள்ளோம்," என்று மகேஸ்வரி தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதிகள் மற்றும் ஊடுருவியவர்களைக் கையாளுவதற்கான CoBRA படையில் கொரிலா மற்றும் ஜங்கிள் படையில் இணைக்கப்படாத 10 அணிவகுப்பு படையை இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது. 2008-2009 இல் இரண்டு அணிவகுப்பு படை CoBRA வில் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2009-2010 இல் மேலும் அணிவகுப்பு படை நான்காக உயர்ந்தது. 2010-11 இல் கூடுதலாக நான்கு அணிவகுப்பு படை சேர்க்கப்பட்டது.

CoBRA படையில் பெண்களை இணைப்பது இதுவே முதன்முறையாகும். தற்போது 3.25 லட்ச மத்திய அயுத போலீஸ் படை(CAPF) உள்ளது. அதில் 208 நிர்வாகிகளும், ஆறு பெண்கள், 15 RAF, 10 CoBRA, ஐந்து சிக்னல் உட்பட 246 அணிவகுப்பு படைகளைக் கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News