Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய ராணுவ விமானப் படையில் களமிறங்கும் பெண் விமானிகள்!

இந்திய ராணுவ விமானப் படையில் களமிறங்கும் பெண் விமானிகள்!

இந்திய ராணுவ விமானப் படையில் களமிறங்கும் பெண் விமானிகள்!

Saffron MomBy : Saffron Mom

  |  13 Jan 2021 4:51 PM GMT

இராணுவத்தில் ஒரு முக்கிய வளர்ச்சியாகப் பெண்களுக்கு அனைத்து துறையிலும் சக பங்கு அளிக்கும் ஒரு முக்கிய நோக்கமாக, 2022 இல் இருந்து இந்திய இராணுவ விமானப் படையில் பெண்கள் விமானங்களை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக அவர்கள் ஹெலிகாப்டர்களை இயக்கி எல்லையில் நடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய வளர்ச்சியின் அறிக்கையானது இந்திய இராணுவ தளபதி M M நாரவனே அவர்களால் அறிவிக்கப்பட்டது. மேலும் தற்போதைய இந்திய இராணுவ விமானப் படையில் பெண்கள் அடிமட்ட வேலைகளைச் செய்துவரும் நிலையில் முக்கிய வளர்ச்சியாகும். மேலும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று நாரவனே தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இதற்கான அறிக்கைகளைத் தாக்கல் செய்ததாக ஜெனரல் நாரவனே கூறினார். அடுத்தகட்ட நடவடிக்கையாக ஜூலையில் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சிகள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார். அதன்பின்னர் ஒரு ஆண்டு கழித்து அவர்கள் விமானத்தை இயக்க தயாராவார்கள்.

நவம்பர் 1 1986 இல் இருந்து விமானப் படையில் ஹெலிகாப்டர்களை அமைதி மற்றும் போர் மண்டிலங்களில் இயக்க தொடங்கப்பெற்றது. மேலும் அவை உயர்மட்ட பகுதிகளில் சுகாதார சிகிச்சைகள் வழங்கவும் மற்றும் அவசரக் காலங்களில் இராணுவ துருப்புகளை வெளியேற்றவும் அவை உதவுகின்றது. மேலும் அது உளவு பார்ப்பது, கண்காணிப்பது, மீட்புப் பணிக்குப் பயன்படுத்துவது, அத்தியாவசிய தேவைகளைக் கொண்டுசெல்வது மற்றும் போர்க்காலங்களில் தேடலுக்கு உதவுவது போன்றவற்றிற்கும் அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News