Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு எவாஞ்சலிஸ்ட் குழுக்கு எதிராக FCRA மீறல் புகார் பதிவு.!

ஒரு எவாஞ்சலிஸ்ட் குழுக்கு எதிராக FCRA மீறல் புகார் பதிவு.!

ஒரு எவாஞ்சலிஸ்ட் குழுக்கு எதிராக FCRA மீறல் புகார் பதிவு.!

Saffron MomBy : Saffron Mom

  |  9 Nov 2020 6:45 AM GMT

ஒரு எவாஞ்சலிஸ்ட் குழு மீது பண மோசடி மற்றும் மதமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படியில் அதன் FCRA உரிமத்தை ரத்துசெய்ய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சட்ட உரிமைகள் ஆய்வகம் புகார் அளித்துள்ளது. இந்த மத பிரச்சார அமைப்பு பஞ்சாபைச் சேர்ந்த மதபோதகர் அங்கூர் நருலா நடத்தி வருகிறார்.

2.6 கோடி பணப்பரிமாற்றம் செய்ய ஒரு ஷெல் நிறுவனத்தை FCRA கீழ் இந்த கிறிஸ்தவ அமைப்பு உருவாகியுள்ளதாகச் சட்ட உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அது பண மோசடி காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பு நிறுத்தப்பட்டது. மேலும் வெளிநாட்டிலிருந்து நன்கொடைகள் பெற அங்கூர் நருலா வழக்கமான வங்கி நடவடிக்கைகளைப் பின்பற்றவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் சட்ட உரிமைகள் ஆணையம் பதிவு செய்தது. அரசின் அனுமதியின்றி வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை அங்கூர் நருலா செய்துவந்தார் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சூனியத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதாகவும் அங்கூர் நருலாவின் ஒரு சர்ச்சைக்குரிய சுவரொட்டியையும் சட்ட உரிமைகள் ஆய்வகம் வெளியிட்டுள்ளது. மேலும் தனது தீர்க்க தரிசனத்தால் ஒரு பெண் கருவுற்றதாகவும் அங்கூர் நருலா சுவரொட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் சட்ட உரிமைகள் ஆணையம் வெளியிட்ட போஸ்டரில் ஒரு பெண் தனது தீர்க்க தரிசனத்தைப் பெற்றவுடன் அவருக்கு இருந்த நீர்க்கட்டி ஒன்று தானாக வெளிவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு சில நம்பமுடியாத விஷயங்கள் மூலம் அவர் மக்களை ஏமாற்றி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்து வருகிறார்.

மேலும் அங்கூர் நருலா பஞ்சாபில் தற்போது போதகராக இருக்கும் தேவாலயத்தில் தற்போது 1,00,000 மக்கள் இணையம் மூலம் அவரது பிரச்சாரத்தில் பங்கேற்கின்றனர். இவர் ஆன்மிக நம்பிக்கை இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் என்பது அவரது வலைத்தளம் மூலம் அறிய முடிகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News