நேரடி வரி வசூல் 8.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
நேரடி வரி வசூல் 8.98 லட்சம் கோடி ரூபாய் ஆக 24 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
By : Bharathi Latha
இந்தியாவை நேரடி வரி வசூல் ஆன வருமானத்துறை வசூல் சுமார் 24 சதவீதம் இந்த வருடம் உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பை நேற்று வெளியீட்டு இருக்கிறது. அதன்படி நேரடி வரி வசூல் சுமார் 8.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து 24 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து அக்டோபர் எட்டாம் தேதி வரையிலான இந்தியாவும் நேரடி வரி வருவாய் 24 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும், மேலும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் வரி வசூல் 16.78% அதிகரித்து இருப்பதாகவும் மத்திய அரசு கூறி இருக்கிறது.
மறுபுறம் தனிநபர் வருமான வரி வசூல் 32.30% உயர்ந்துள்ளது. மக்கள் அனைவரும் மத்திய அரசின் பெரு முயற்சியை அடைத்து தனிநபர்களின் வருமானங்களில் மீதான வருமான வரியில் சரியான முறையில் செலுத்தி வருகிறார்கள். அரசாங்கத்திற்கு இதனால் மிகப்பெரிய வரவு கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது நிதியாண்டு 2021 மற்றும் 22 ஆம் ஆண்டிற்கான வரி வருவாய், நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை காட்டிலும் நேரடி வரி வசூல் 52.46% உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேரடி வருவாய் என்பது பொதுமக்களின் வருமான பணத்திற்காக விதிக்கப்படும் வருவாய் நேரடி வருவாய் மற்றும் கார்ப்பரேட் வருவாய் என்பது நிறுவனங்களில் லாபத்தில் மீது விதிக்கப்படுவது கார்ப்பரேட் வருவாய் என்று கூறப்படுகிறது. நேரடி மற்றும் கார்ப்பரேட் வரி வசூல் இந்த ஆண்டு பட்ஜெட்டின் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News