Kathir News
Begin typing your search above and press return to search.

காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு 13 சிறப்பு ரயில்கள் : தமிழகம்-உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் தமிழ்!

காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு 13 சிறப்பு ரயில்கள் : தமிழகம்-உத்தரப்பிரதேசத்தை இணைக்கும் தமிழ்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2022 12:37 PM IST

காசி தமிழ் சங்கமம்

சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய அரசின் முன்முயற்சியாக காசி தமிழ் சங்கமம் - 2022 அமைந்துள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை கொண்டாடுவதாக இது இருக்கும். மேலும் அழகிய தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் இது கொண்டாடும்.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக பிஎச்யு நிகழ்வின் ஒரு பகுதியாக காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக கொண்டு இரண்டு தொன்மையான இந்திய கலாச்சார நகரங்களின் பன்முகத் தன்மையுடன், அறிஞர்களிடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள் இடம்பெறும்.

இரண்டு ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களை நெருக்கமாக கொண்டு வருவது நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தில் புரிதலை உருவாக்குவது இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கமாகும்.

சிறப்பு ரயில்கள்

ஒருமாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வின் போது தமிழ்நாட்டிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு இந்திய ரயில்வே மொத்தம் 13 ரயில்களை இயக்கவுள்ளன.

Input From: KasiTamil


Next Story
கதிர் தொகுப்பு
Trending News