கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய முதல் ISIS இந்திய தற்கொலை குண்டுதாரி!
பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்கு கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
By : Bharathi Latha
பயங்கரவாத அமைப்புகளுக்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை எப்படி தன் பக்கம் வைப்பது என்ற கருத்து தெரிந்து இருக்குமோ? என்னவோ? அந்த வகையில் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒருவர் தன்னுடைய கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி பின்பு தற்கொலை குண்டுதாரி ஆக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர்தான் முதல் இந்திய தற்கொலை குண்டுதாரி என்று அழைக்கப்படுவதாக பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த செய்தி வலைதளங்கள் இந்த ஒரு தகவலை பகிர்ந்து உள்ளது.
ISIS பயங்கரவாத அமைப்பின் வலைத்தளமான வாய்ஸ் ஆஃப் கோஹரசனில் வெளியான கட்டுரையில், கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறிய கேரளாவைச் சேர்ந்தவர்தான் முதல் இந்திய தற்கொலை குண்டுதாரி". தீவிரவாதிகளின் இந்த தகவலை அடுத்து, இந்திய மத்திய புலனாய்வு அமைப்புகள் இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளன. இதில் குறிப்பிடப்படும் அந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் யார்? என்பது குறித்து போலீசார் பலமுனைகளில் விசாரணையை தொடங்கினார்கள்.
கேரளாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் பொறியாளராகப் பணியாற்றி பின்னர் துபாய்க்கு குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இளைஞன் அபூபக்கர் அல்-ஹிந்தி என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டதாகவும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்தபோது இஸ்லாமியத்தின் மீதி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆன்லைன் போர்டல் மூலமாக தீவிரவாத அமைப்புடன் பழக்கம் ஏற்பட்டு இந்தியாவின் முதல் தற்கொலை குண்டுதாரி ஆக இவர் மாறியிருக்கிறார்.
Input & Image courtesy:India