Begin typing your search above and press return to search.
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்!
சிவகாசி பட்டாசு ஆலை தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்!

By : Saffron Mom
வியாழக்கிழமை அன்று ஒரு அதிர்ச்சி ஊட்டும் சம்பவமாகச் சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமாய்ந்துள்ளனர்.

இந்த விபத்தானது சிவகாசியில் கலையர்குறிச்சி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது. இது பலபேரைக் காயமடையச் செய்துள்ளது. மேலும் ரசாயன மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொட்டகைகளும் விபத்தில் எறிந்துள்ளன.
Another accident at Fire Crackers factory, again involving fancy crackers, again at Sivakasi.. 5 dead.. several injured.
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) February 25, 2021
3rd accident this year.@CMOTamilNadu @OfficeOfOPS pic.twitter.com/FTHQwbRbux
இந்த விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர். மேலும் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் இருக்க விரைந்து அணைக்க முயன்றனர். மேலும் தீயில் கருகியவற்றை அகற்றிக் காயமடைந்தவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.
உடனடியாக விபத்து நடந்ததற்கான காரணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விபத்தானது பிப்ரவரி 2 இல் சாத்தூர் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் உயிரிழந்த 23 பேரின் கொடூர சம்பவம் நடந்த 23 நாட்களுக்குப் பிறகு நடந்துள்ளது. அந்த விபத்தானது பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த ரசாணையங்கள் கலந்ததால் ஏற்பட்டுள்ளது.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் நாடு முதலமைச்சர் இருவரும் பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 மற்றும் 3 லட்ச ரூபாயை வழங்க அறிவித்துள்ளனர்.
Next Story
