அஸ்ஸாமிலும் வந்துவிட்டது வந்தே பாரத் ரயில் சேவை.. வேற லெவலாக மாறும் வடகிழக்கு மாநிலங்கள்..
அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை மே 29-ம் தேதியன்று மதியம் 12 மணிக்கு நேற்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடந்து செல்லும், அதே நேரத்தில் தற்போதைய அதிவேக ரயில் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் அதே பயணத்தை மேற்கொள்ளும்.
இதேபோல் புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கிமீ ரயில் பாதையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதிக வேகத்தில் ஓடும் ரயில்களுடன் மாசு இல்லாத போக்குவரத்தை வழங்கவும், ரயில்களின் இயக்க நேரத்தை குறைக்கவும் இது உதவும். மின்சார இழுவையில் இயங்கும் ரயில்கள் மேகாலயாவிற்குள் நுழைவதற்கு இது கதவுகளைத் திறக்கும்.
அஸ்ஸாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள MEMU பணிமனைகளை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்தப் புதிய வசதி, இந்தப் பகுதியில் இயங்கும் டிஇஎம்யு பெட்டிகளைப் பராமரிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். நாட்டின் தற்போது முக்கிய பகுதிகள் வழங்கப்பட்ட வருகிறது வந்தே பாரத் ரயில் செய்திகள். இதை நாட்டில் முக்கியமான பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
Input & Image courtesy: News