Kathir News
Begin typing your search above and press return to search.

சிகிச்சை பேரில் பழங்குடியினரை மதமாற்றும் மிஷனரிகள்: காவல் துறையினரிடம் புகார்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கமல்நாத்தின் தொகுதியில் பழங்குடியினர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம்.

சிகிச்சை பேரில் பழங்குடியினரை மதமாற்றும் மிஷனரிகள்: காவல் துறையினரிடம் புகார்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Sep 2022 2:56 AM GMT

மத்திய பிரதேசத்தில் தமியா தொகுதியில் உள்ள பழங்குடியினர் சமூகத்தை மிஷனரிகள் கட்டாய மதமாற்றத்திற்கு உட் படுத்துகிறார்கள். மிஷனரிகள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் கிராமத்தில் நுழைந்து அப்பாவி பழங்குடியின மக்களை கட்டாயம் மதமாற்றத்திற்கு உள்ளாக்கி கிறிஸ்துவ மதத்திற்கு அவர்களை மாற்றுகிறார்கள். மேலும் இது தொடர்பாக போலீஸ்சாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் பெயரில்தான் இந்த ஒரு சம்பவம் வெளியுலகத்திற்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


மேலும் போலீஸிடம் அளிக்கப்பட்ட புகாரில் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு பெருந்தொகை தருவதாகவும், மிஷனரிகள் ஏமாற்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கட்டாய மதமாற்றங்களும், மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். குறிப்பாக கிராமத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மருத்துவ சிகிச்சை முகாம் என்பதன் பெயரில் அப்பாவி பழங்குடியின மக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.


முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் தொகுதியான மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, இது கடந்த சில மாதங்களாக பின்வரும் கிராமங்களில் நடக்கிறது. குறிப்பாக சங்ககேரா, டெல்காரி, ஜாபியா, பரசோம்ரி மற்றும் தமியா தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மிஷனரிகள் மூலம் இந்த செயல் நடைபெறுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அப்பகுதிக்கு பொறுப்பான காவல்நிலையம் தெரிவித்துள்ளது.

Input & Image courtesy: Hindu Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News