Kathir News
Begin typing your search above and press return to search.

FCRA ஆய்வின் கீழ் பாரதீய கிசான் யூனியனின் வெளிநாட்டு நிதி.!

FCRA ஆய்வின் கீழ் பாரதீய கிசான் யூனியனின் வெளிநாட்டு நிதி.!

FCRA ஆய்வின் கீழ் பாரதீய கிசான் யூனியனின் வெளிநாட்டு நிதி.!

Saffron MomBy : Saffron Mom

  |  21 Dec 2020 5:11 PM GMT

தற்போது டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சார்ந்த பாரதீய கிசான் யூனியன்(ஏக்தா-உக்ரஹான்) இதுவரை பெற்ற வெளிநாட்டு நிதிகள் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க அரசாங்கம் கேட்டுள்ளது.

இந்த அமைப்பு கணக்கு வைத்துள்ள பஞ்சாபைக் கிளையாகக் கொண்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதிகள் குறித்த தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு தன் மின்னஞ்சலுக்கு அந்நிய செலாவணி துறையிடம் இருந்து அறிக்கை வந்துள்ளதாக BKU வின் பொதுச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

BKU அமைப்பானது இந்த ஆண்டு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் அதனைத் திரும்பப்பெறக் கோரியும் போராட்டம் நடத்திவரும் அமைப்புகளில் ஒன்றாகும். அதிகார வட்டாரங்களின் படி, இந்த அமைப்பானது கடந்த இரண்டு மாதங்களில் உள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து எட்டு லட்ச ரூபாய் நிதியைப் பெற்றுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் நிதிகளை பெரும் அமைப்புகள் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தின் கீழ், இந்திய விதிமுறைகளின் படி ரிசர்வ் வங்கியில் பதிவு செய்திருக்க வேண்டும். வெளிநாடு நிதி தொடர்பாக நேரடி சம்மனைப் பெற்றால் பதிலளிக்க BKU தங்கள் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News