Kathir News
Begin typing your search above and press return to search.

வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்ளா திடீர் நேபாள பயணம் - காரணங்கள் என்ன?

வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்ளா திடீர் நேபாள பயணம் - காரணங்கள் என்ன?

வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்ளா திடீர் நேபாள பயணம் - காரணங்கள் என்ன?
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  24 Nov 2020 8:00 PM IST

வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்ளா வரும் 26 மற்றும் 27 தேதிகளில் நேபாளம் நாட்டுக்கு செல்கிறார். நேபாளம் செல்லும் அவர் இப்போது உள்ள சூழ்நிலைகள் அடிப்படையில் அந் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நமது ராணுவ படைகளின் தலைமை தளபதி ராவணே நேபாளம் சென்றார். அப்போது அவருக்கு அந்நாட்டு அரசு உரிய ஒரு சிறப்பான மரியாதையை அளித்தது.

எல்லையில் சீனாவின் தூண்டுதலால் ஏற்பட்ட இந்திய எல்லைகள் குறித்த நேபாளத்தின் தவறான வரைபடங்கள் வெளியீடு குறித்து இந்த பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அதே சமயம் சீனா ஒரு போதும் நேபாள எல்லைகள் வழியே இந்திய எல்லைகளுக்குள் உள்ளே நுழைய வழி ஏற்படுத்தக் கூடாது, அதே சமயம் நேபாளம் - இந்தியா இடையே தொடர்து அமலில் இருக்கும் பழைய ஒப்பந்தங்கள் மீறப்படக் கூடாது என்பது பற்றி அவர் பேசிவிட்டு வந்ததாக கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து உளவுத்துறை தலைவர் சமந்த் கோயலும் அங்கு சென்று பார்த்துவிட்டு வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் லடாக் பகுதியில் உள்ள இந்திய எல்லை வழியாக சீன இராணுவத்தினர் ஊடுருவி பூடான் எல்லை வழியாக உள்ளே சென்று 2 கிலோ மீட்டர் தொலைவில் அங்கு சில மாதங்களுக்கு முன்பாக சீனர்கள் வசிக்கும் வகையில் கிராமம் ஒன்றை அமைத்துள்ளதாக செய்திகள் சமீபத்தில் வெளிவந்தன.

இந்நிலையில் சீனாவால் அண்டை நாடுகள் வழியாகஇந்தியாவுக்கு எந்த ஆபத்துகளும் ஏற்பட்க்கூடாது. வளரும் விஷச் செடிகளை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளியுறவுத்துறை செயலாளர் ஷ்ரிங்ளா நேபாளம் செல்வதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின்போது ஷ்ரிங்ளா நேபாளத்துடன் புதிய ஒப்பந்தத்தை மேற் கொள்வதற்கான புதிய வழி வகையை ஏற்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News