பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை - நுபுர் சர்மாவுக்கு ஆதரவளித்த கவுதம் காம்பீர்!

By : Thangavelu
பா.ஜ.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு இஸ்லாமிய நாடுகள் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகள் எதிர்ப்பு மற்றும் மிரட்டல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நுபுர் சர்மாவுக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் காம்பீர் உட்பட பல வலதுசாரி தலைவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அதன்படி நுபுர் சர்மாவுக்கு ஆதரவு அளித்த கபில் மிஸ்ரா மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா மற்றும் பா.ஜ.க. தலைவர்களை கொண்ட ஆதரவாளர்களின் வரிசையில் தற்போது கவுதம் காம்பீர் இணைந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில கூறியிருப்பதாவது: மன்னிப்பு கேட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் மரண அச்சுறுத்தல்களின் மோசமான காட்சியைக் கண்டு மதச்சார்பற்ற தாராளவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களின் மவுனம் நிச்சயமாக காது கேளாதது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
Source: One India Tamil
