செருப்பு அணிந்து கோவிலில் நுழைந்த இளைஞர்கள்: வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 4 பேர் அதிரடி கைது!
புகழ்பெற்ற மலைக் கோவிலுக்கு 4 இளைஞர்கள் காலில் செருப்பு அணிந்தவாறு நுழைந்து அதனை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
By : Thangavelu
புகழ்பெற்ற மலைக் கோவிலுக்கு 4 இளைஞர்கள் காலில் செருப்பு அணிந்தவாறு நுழைந்து அதனை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், தக்ஷின கன்னட மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் உள்ளது. அந்த கோவிலுக்குள் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி 4 இஸ்லாமிய இளைஞர்கள் செறுப்பு அணிந்தவாறு உள்ளே நுழைந்தது மட்டுமின்றி அதனை வீடியோவாக பதிவிட்டு, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இந்துக்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பாஜக எம்.எல்.ஏ., ராஜேஸ் நாயிக் அழுத்தம் கொடுத்ததின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞர்ளை தேடினர்.
அவர்கள் மங்களூரு மாவட்டத்தில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து பஷீர் ரஹ்மான் 20, முகமது தன்ஷிக் 19, இஸ்மாயில் அர்ஹமாஸ் 22, முகமது ரஷாத் 19 ஆகிய நான்கு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபகாலமாக இந்துக்கள் மத நம்பிக்கையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சீர்குலைத்து வருவது அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Source: News 18
Image Courtesy: Social Media