Kathir News
Begin typing your search above and press return to search.

கொடூரம்! கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்களால் தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன்!

கொடூரம்! கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்களால் தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன்!

கொடூரம்! கிறிஸ்துமஸ் விருந்தில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்களால் தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞன்!

Saffron MomBy : Saffron Mom

  |  28 Dec 2020 2:31 PM GMT

வழக்கம் போல் பிரான்சில் முஸ்லீம் பிரிவினைவாத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் சமீபத்தில் முடிந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர் ஒருவரை முஸ்லீம் கும்பல் தாக்கியுள்ளனர். பிரான்ஸில் 20 வயது இளைஞன் தன் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்தவுடன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் புகைப்படத்தில் இணைத்ததில் பதிவேற்றியவுடன் அவருக்குத் தெரிந்த சக முஸ்லீம் நபர் அவரை அச்சுறுத்தியுள்ளார். கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றதற்காக அவர் கோபமாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞன் அமலாக்க அதிகாரியின் மகனாவார். தாக்குதல் நடத்தியவர் 20 வயது இளைஞனை, "தூய்மையற்றவர், பாம்பின் மகன் போன்று கூறி, அவருக்கு உன்மையானா அராப் என்ன என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார். இந்த விவாதம் போர்க்களமாக இருந்த போதிலும் இளைஞன் அதனை நேரடியா தீர்க்க விரும்பினார்.

20 வயது இளைஞனை நான்கு பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தினர் மற்றும் காவல்துறையிடம் புகார் செய்தால் பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று அச்சுறுத்தியுள்ளனர். அச்சுறுத்திய போதிலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இளைஞன் புகாரளித்துள்ளான். இந்த சம்பவமானது பிரான்ஸ் அதிகாரிகளின் காதுக்குச் சென்று கண்டனங்களைப் பெற்றது மற்றும் முஸ்லீம்களின் பிரிவினைவாத போராட்டத்தையும் உறுதி செய்தது.

இந்த சம்பவத்தை உறுதி செய்த உள்துறை அமைச்சர் ஜெரால்டு தர்மனின் விசாரணையும் நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து டிவிட்டருக்கு எடுத்துச் சென்றார். பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் இருவரும் அமலாக்கத் துறையில் பணிபுரிகின்றனர்.

இந்த ஆண்டு பிரான்சில் ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது, மூன்று நபர்கள் கொல்லப்பட்டது போன்ற இஸ்லாமிய வாதிகளின் பயங்கரவாத சம்பவத்துக்குக் கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். பிரான்ஸ் அதிபரின் நடவடிக்கைக்குப் பல முஸ்லீம் நாடுகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. `

Next Story
கதிர் தொகுப்பு
Trending News