கன்னியாஸ்த்ரீ பாலியல் வன்கொடுமை: குற்றம் நிரூபிக்க தவறிய கேரள கம்யூனிஸ்ட் அரசு, பிஷப் விடுதலை!
By : Thangavelu
கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சரியான ஆதாரத்தை அளிக்காத நிலையில் அவரை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம், சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக செயல்பட்டு வந்தவர் பிராங்ககோ முளய்க்கால். இவர் கோட்டயத்தில் உள்ள ஒரு மடத்தில் 13 முறை பிஷப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018ம் ஆண்டு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார். பிஷப் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் கேரள அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் மற்ற கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சாலையில் இறங்கி பல நாட்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் பயந்துபோன கேரள அரசாங்கம் பிஷப் பிராங்கோ முளய்க்கல்லை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி கைது செய்தது. இதன் பின்னர் சில நாட்கள் சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கில் எதிர்க்கட்சி சாட்சியாக இருந்த பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். சில கன்னியாஸ்திரிகளும் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் அந்த வழக்கு வலுவிலக்க ஆரம்பித்தது.
இதனிடையே இந்த வழக்கு கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுமார் 100 நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஙிர்பபு இன்று காலை அறிவிப்பதாக நீதிபதி கூறியிருந்தனர். அதனை தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற பின்வாசல் வழியகா வந்தார் பிராங்கோ முளய்க்கல். அவரது உறவினர்களும் வந்தினர். அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிஷப் பிராங்கோ முளய்க்கலை விடுவிப்பதாகவும். பிஷம் குற்றம் செய்ததாக தெளிவுபடுத்துவதில் அரசு தரப்பு தோற்றுவிட்டது எனவும் கூறினார். இதனை கேள்விப்பட்ட பிஷப் சிரித்த முகத்துடன் தனக்காக வாதாடிய வக்கீலை கட்டியணைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். இவரது விடுதலை கேரள கன்னியாஸ்திரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Vikatan