Kathir News
Begin typing your search above and press return to search.

வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசம்: மதுபிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு.!

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழலில் மாநில அரசின் வருவாயை பெருக்குவதற்கு இந்த வழியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிகமான அளவுக்கு மதுக்கடையை நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்துக்கு ஒருநாள் மதுபானம் இலவசம்: மதுபிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அரசு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  8 July 2021 6:23 PM IST

அரசு எப்போதும் மக்கள் நலன் சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது. தமிழகத்தில் டிவி, மிக்சி, மின்விசிறி, ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகளை வழங்கி வந்தது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் மற்றும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தெலங்கானா அரசு ஒரு அதிரடியான திட்டத்தை அறிவிக்க உள்ளது. அதாவது வாரத்திற்கு ஒருநாள் மதுபாட்டில்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் சூழலில் மாநில அரசின் வருவாயை பெருக்குவதற்கு இந்த வழியை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிகமான அளவுக்கு மதுக்கடையை நோக்கி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மதுபாட்டில்கள் உரிமம் பெற்ற கடைகளில் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு அதன் மூலம் மதுபாட்டில்கள் வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற திட்டங்களை அரசு அமல்படுத்தினால் பெரும்பாலனா இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழல் உருவாகும். எனவே அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News