அனைத்து மாநிலங்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு உத்தரவு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து தடுப்பூசி பணிகளில் மத்திய அரசு நேரடியாக கண்காணித்து வருகிறது. தேவையான மருந்துகளை பற்றாக்குறை இன்றி மாநில அரசுகளுக்கு அனுப்பி வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை ஏற்று கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ரூ.150க்கு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.