அடிக்கடி தேர்தல்கள் நடப்பது, வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி.!
அடிக்கடி தேர்தல்கள் நடப்பது, வளர்ச்சிப் பணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது - பிரதமர் நரேந்திர மோடி.!

By : Rama Subbaiah
அரசியல் சாசன தினமான நேற்று சட்டசபை சபாநாயகர் களின், 80ம் ஆண்டு மாநாடு, குஜராத் மாநிலம், கேவாடியாவில் இரு நாட்களுக்கு முன்பாக துவங்கியது. மாநாட்டை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்தார். மாநாட்டின் இறுதி நாளான நேற்று, காணொலி வழியாக, பிரதமர் நரேந்திர மோடி நிறைவு உரையாற்றினார்.
அப்போது பிரதமர் 2008ல், நடந்த மும்பை பயங்கரவாத கலவரத்தை நினைவு கூர்ந்தார். இந்த நாளில் நமக்கு ஏற்பட்ட காயங்களை யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ் அதிகாரிகள் உட்பட, பொது மக்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.
நாடு முழுதும் ஒரே நேரத்தில், லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு மட்டுமல்லாமல் பஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்க வேண்டும். லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால், அரசுகளால் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்; தேவையற்ற செலவுகளையும் தவிர்க்க முடியும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.
நாட்டின் அரசியல் சட்டம், 1949ம் ஆண்டு நவ., 26ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் இந்த நாள். இந்த நாள், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அரசியல் சட்டத்தை இயற்றிய நம் முன்னோர்களை, நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் கனவு கண்ட இந்தியாவை, நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு, பிரதமர் கூறியுள்ளார்.
