G20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய இந்தியா... அமெரிக்கா பாராட்டு...
By : Bharathi Latha
இந்தியா தற்பொழுது ஜி-20 தலைமை பொறுப்பை இந்த ஆண்டு எடுத்து வெற்றிகரமாக முடித்து இருக்கிறது. மற்ற நாடுகள் நடத்திறாத வகையில் தற்பொழுது இந்தியா உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக ஜி-20 தலைமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், G20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இந்தியா நிரூபித்துள்ளது என அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் தற்பொழுது 13வது இந்திய-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர் இந்தியாவைப் பற்றி பேசும் பொழுது, "இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுடனான உறவில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளது. நாங்கள் இரு நாடுகளின் மீதும் அக்கறை கொள்கிறோம். இருவருடனும் எங்கள் உறவு உறுதியானது. இருநாட்டு இறையாண்மை, பாதுகாப்பு என்பது முக்கியமானது. இதனை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
அதோடு மட்டுமல்ல அது தற்பொழுது இதுவரை உலகில் மற்ற நாடுகள் இல்லாத வகையில், ஜி20யை வெற்றிகரமாக நடத்தி இந்தியா நிரூபித்துள்ளது. சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்தியா மீண்டும் உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் முதல் ஆதாரமாக இருக்கும். அமெரிக்காவில் படிக்கும் 25 சதவீதம் வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் இருந்து மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News