G7 மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!
By : Parthasarathy
G7 மாநாட்டில் கலந்துகொள்ள இது வரை பிரதமர் மோடிக்கு இரண்டு முறை அழைப்பு வந்ததை அடுத்து, மூன்றாவது முறையாக நாளை நடக்கவிருக்கும் G7 மாநாட்டிற்கு அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி வாயிலாக பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற G7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது. அப்போது அந்த மாநாட்டில் மோடி பங்கேற்றார். அதே போல் பிரிட்டனில் நடைபெற்ற G7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு G7 மாநாட்டில் பங்கேற்க பிரிட்டனுக்கு மோடி பயணிக்கமாட்டார் என வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்தது.
இந்த G7 மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது, இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொள்வார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த G7 மாநாட்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.