அசாம் மாநிலம் பான் பஜார் காவல் நிலைய எல்லையில் மைனர் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிகி அலியை கவுகாத்தி போலீஸார் சுட்டுக் கொன்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக கற்பழித்தவர் குற்ற நடந்த இடத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது.
தப்பிச் செல்லும் முயற்சியில், அதிகாரியின் ரிவால்வரைப் பறித்து , போலீஸ் அதிகாரிகளை நோக்கி இரண்டு ரவுண்டுகள் சுட்டார். அதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இதனையடுத்து கற்பழிப்பு குற்றவாளி கொல்லப்பட்டார். காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
20 வயதிற்குட்பட்ட 5 முஸ்லிம் ஆண்களைக் கொண்ட கும்பல் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதல் வலையில் விழவைத்து , கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாக பதிவேற்றினர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஃபைசூர் அலி, புனா அலி, பிங்கு அலி மற்றும் ராஜா அலி ஆகிய நான்கு பேரை காணவில்லை, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இப்படியொரு கொடூர சம்பவம் நடந்த நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட காமுகனின் தாய், கற்பழிக்கப்பட்ட பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளார்.
குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அபிஜித் சர்மா கூறுகையில்,கற்பழிப்பு குற்றவாளியை போலீசார் அதிகாலை 1 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றார்.