Kathir News
Begin typing your search above and press return to search.

கேஸ் சிலிண்டர் புக் பன்றீங்களா.. அப்போ மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.!

கேஸ் சிலிண்டர் புக் பன்றீங்களா.. அப்போ மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.!

கேஸ் சிலிண்டர் புக் பன்றீங்களா.. அப்போ மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jan 2021 7:32 PM GMT

கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கு மிஸ்டு கால் வசதியை இண்டேன் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து அவை கூறியிருப்பதாவது: சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இண்டேன் நிறுவனத்தின் சிலிண்டர்களை பயன்படுத்துவோர் சிலிண்டர் புக்கிங்கிற்கு பிரத்யேக போன் நம்பர் தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் சிலிண்டர்கள் புக்கிங் செய்யப்பட்டு ஒரிரு நாட்களில் சிலிண்டர்கள் டெலிவிரி செய்யப்பட்டது.

இந்நிலையில் மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை தற்போது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News