பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜ.க உறுதி: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!
பொது சிவில் சட்டம் கொண்டு வர பா.ஜ.க உறுதி கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தகவல்.
By : Bharathi Latha
டெல்லியில் ஆங்கில செய்தி நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக பா.ஜ.க பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறதா? என்பது தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறுகையில், இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று முன்பு இருந்தே மக்களுக்கு பா.ஜ.க அளித்துவரும் முக்கியமான வாக்குறுதி ஆகும். பொது சிவில் சட்டம் கொண்டுவர பா.ஜ.க தற்போது உறுதி எடுத்து இருக்கிறது.
ஜனநாயகத்தில் உள்ள அனைத்து குடிமக்களும் பேசுவதற்கான அதிகாரம் உள்ளது. அவர்கள் தங்களுடைய விவாதங்களை ஆரோக்கியமான முறையில் எடுத்து வைக்க முடியும். குறிப்பாக பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலமாக இந்தியாவில் உள்ள எந்த ஒரு இடத்திலும் அவர்களால் ஆரோக்கியமான விவாதங்களை எடுத்து வைக்க முடியும். இதைப் பற்றி ஆலோசனை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஆலோசனை குழு முடிவுக்கு பிறகு, பொது சிவில் சட்டம் இந்தியாவில் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு ஒன்றை, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அக்குழுக்கள் அளிக்கும் முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க ஆதரிக்கும் என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதை உரிய நேரத்தில் கொண்டு வருமாறு நாடாளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை கூறியுள்ளது. அதனை எல்லோரும் மறந்து விட்டார்கள். இந்திய நாட்டிலுள்ள மாநிலங்கள் அனைத்தும் மத சார்பற்றதாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும். ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும். காஷ்மீரில் 370 தடை செய்யப்பட்டது, அது மோடியின் அரசின் மிகப்பெரிய வெற்றியாகும். அதை நீக்கிய பிறகு காஷ்மீரும் இந்தியாவுடன் தான் தற்போது இணைந்து இருக்கிறது என்று தன்னுடைய பேட்டியில் மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar