Kathir News
Begin typing your search above and press return to search.

விரைவில் ஜியோவின் 5 ஜி.. இந்தியாவில் புதியதொரு புரட்சி.. முகேஷ் அம்பானி அறிவிப்பு.!

விரைவில் ஜியோவின் 5 ஜி.. இந்தியாவில் புதியதொரு புரட்சி.. முகேஷ் அம்பானி அறிவிப்பு.!

விரைவில் ஜியோவின் 5 ஜி.. இந்தியாவில் புதியதொரு புரட்சி.. முகேஷ் அம்பானி அறிவிப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Dec 2020 6:45 PM GMT

இன்றைய உலகம் முழுவதும் டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. ஒருவர் கடைக்கு சென்ற காலம் போய் ஒரு கடையே வீட்டுக்கு வருகின்ற காலமாக மாறியுள்ளது. இதற்கு முழு காரணம் இண்டர்நெட்தான். இதில் புதிய புரட்சியை இந்தியா சாதனை படைத்து வருகிறது. வளரும் நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை அடுத்த ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோவின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். மத்திய தொலைத் தொடர்புத்துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து ‘இந்தியா மொபைல் மாநாடு 2020 ஐ நடத்துகின்றன.

இந்த மாநாடானது இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி கூறியதாவது: 5ஜி சேவையின் வருகை பெரிய அளவிலான தொழிற்புரட்சியை ஏற்படுத்தும். அதன் முன்னோடியாக ஜியோ நிறுவனம் திகழந்து வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகளவிலான சிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

5ஜி சேவையை அதிகரிக்கவும், விரைவுபடுத்துவதற்கும் அதை மலிவு மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வதற்கும் கொள்கை அளவிலான நடவடிக்கைகள் தேவை. ஜியோ 5ஜி நெட்வொர்க் சேவை உள்நாட்டின் ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப கூறுகளால் இயக்கப்படும்.

இந்தியா முழுவதும் 5ஜி சேவையில் புதியதொரு புரட்சியை வரும் 2021ம் ஆண்டின் பிற்பாதியில் படைக்க உள்ளது. இந்தியாவுக்கு இது ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதில் இருந்து டிஜிட்டல் மையத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News