ஊர்மக்கள் பரிசாக அளித்த தங்கக் கிரீடம்.. கரூவூலத்தில் ஒப்படைத்த கர்நாடக துணை முதலமைச்சர்.!
ஊர்மக்கள் பரிசாக அளித்த தங்கக் கிரீடம்.. கரூவூலத்தில் ஒப்படைத்த கர்நாடக துணை முதலமைச்சர்.!

By : Kathir Webdesk
கர்நாடக துணை முதலமைச்சராக இருப்பவர் கோவிந்த் கர்ஜோல். இவருக்கு சமீபத்தில் கிராம மக்கள் பரிசாக அளித்த தங்கக் கிரீடத்தை அரசு கருவூலத்தில ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு துணை முதலமைச்சராக கோவிந்த் கர்ஜோல் உள்ளார். அவர் தனக்கு கிடைக்கும் பரிசுகளை உடனடியாக கருவூலத்தில் ஒப்படைத்து விடுகிறார்.

தனது சொந்த ஊர் மக்கள் சிறப்பாக பணி செய்கிறார் என்று, துணை முதலமைச்சருக்கு 140 கிராம் எடையுள்ள தங்கக் கிரீடத்தைப் பரிசாக அளித்தனர்.
இவர் அரசியல் விதிமுறைப்படி, அரசு கருவூலத்தில் செலுத்துவதற்காகத் கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார். இவரை போன்று மற்ற அரசியல் தலைவர்களும் முன்வந்தால், நாடு மிகவும் சிறப்பாக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை.
