Kathir News
Begin typing your search above and press return to search.

'இறக்குமதியை இந்தியா நம்பியிருந்த காலம் போய் ஏற்றுமதி செய்கிற காலம் வந்துவிட்டது' - பிரதமர் மோடி பெருமிதம்

நூறு ஆண்டுகால பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இறக்குமதியை இந்தியா நம்பியிருந்த காலம் போய் ஏற்றுமதி செய்கிற காலம் வந்துவிட்டது - பிரதமர் மோடி பெருமிதம்

Mohan RajBy : Mohan Raj

  |  22 Oct 2022 1:30 PM GMT

நூறு ஆண்டுகால பிரச்சனையை 100 நாட்களில் தீர்க்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் மத்திய அரசன் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மேல் பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரயில்வே, அஞ்சல் துறை, சுரங்கம், ஆயுள் காப்பீடு கழகம் உள்ளிட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அவற்றில் 'ரோஜ்கர் மேளா' என்ற பெயரில் நடத்தப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு தீபாவளி பரிசாக பணி ஆணையை வழங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதில் பிரதமர் மோடி பணி அணைகளை இளைஞர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். பணி அணைகளை வழங்கி தொடங்கி வைத்து பிரதமர் பேசியதாவது, '10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் கடந்த எட்டு ஆண்டுகளில் வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான அரசின் முயற்சியில் முக்கியமான மைல்கல் ஆகும். இன்று 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது 100 ஆண்டு கால வேலையின்மை மற்றும் சுய வேலைவாய்ப்பு பிரச்சனை 100 நாட்களில் தீர்க்க முடியாது' என்றார் பிரதமர்.

மேலும் பேசிய அவர், 'கொரோனா காலகட்டத்தில் சிறு தொழில் துறைக்கு 3 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் உதவியால் ஒன்னரை கோடிக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் பறிபோவது தவிர்க்கப்பட்டது. உற்பத்தி சுற்றுலா மற்றும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த துறைகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது, இறக்குமதியை நம்பி இருந்த காலம் மாறி தற்போது இந்தியா ஏற்றுமதி அதிகரித்து வருகிறது' எனவும் பேசினார் பிரதமர் மோடி.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News