Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு தனியார் அமைப்பு இந்தியாவின் தகுதியை மதிப்பிடுவதா? இந்திய பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியான தகவலுக்கு அரசின் அதிரடி விளக்கம்!

Government doesn't agree with India's rank in World Press Freedom Index

ஒரு தனியார் அமைப்பு இந்தியாவின் தகுதியை மதிப்பிடுவதா? இந்திய பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியான தகவலுக்கு அரசின் அதிரடி விளக்கம்!

MuruganandhamBy : Muruganandham

  |  22 Dec 2021 8:10 AM GMT

இந்திய பத்திரிகை சுதந்திரம் குறித்து, இந்தியாவில் இல்லாத ஒரு நிறுவனம் எடுத்த முடிவுகளுக்கு மத்திய அரசு உடன்படவில்லை எனவும், ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனவும் என மக்களவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. .

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 142-வது இடத்தில் இருப்பது குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், உலகப் பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு என்பது, ஒரு வெளிநாட்டு அரசு சாரா அமைப்பால் எடுக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் அதன் கருத்துக்கள் மற்றும் நாட்டின் தரவரிசைக்கு உடன்படவில்லை. அந்த அமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம், திரிபுரா காவல்துறை சமீபத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட 102 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை ஏழாவது அட்டவணையின் கீழ் வகைபடுத்தப்பட்டுள்ளன. குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், பதிவு செய்தல் மற்றும் விசாரணை செய்தல் மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்க இந்திய அரசியலமைப்பு மற்றும் மாநில அரசுகளுக்கு பொறுப்பு உள்ளது.பத்திரிகையாளர்கள் உட்பட நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, என்றார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 20, 2017 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது, என்று தாக்கூர் மேலும் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News