யாரையும் உளவு பார்க்கவில்லை.. மத்திய அமைச்சர் விளக்கம்.!
மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
By : Thangavelu
மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மதியம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் மாலை 3.30 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது எதிர்க்கட்சியினர் முழக்கம் எழுப்பியபோது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலா ஜோஷி அனைத்து விவாதங்களையும் விவாதிக்க தயார் என எதிர்க்கட்சியினர் தங்களின் அமளியை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் எலக்ட்ரானிக் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். ஊடகங்களில் வெளிவந்திருக்கும் தகவல் சரியில்லை. மத்திய அரசு யாரையுள் உளவு பார்க்கவில்லை. மென்பொருள் நிறுவனம் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் தவறானது.
எனவே இந்தியா அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது மறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாருடைய அலைபேசியும் உள்வு பார்க்கப்பட்டிருந்தால், அதனை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்த பின்னர்தான் உளவு பார்க்க முடியும். அப்படி இல்லாத நிலையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதது.
மேலும், ஒருவரின் அலைப்பேசியை உளவு பார்க்க வேண்டும் என்றால் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகள் உள்ளது எனக்கூறினார்.