268.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அரசு சாதனை.!
268.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து அரசு சாதனை.!

காரீப் பருவத்தில், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், கேரளா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் கடந்த 11-ஆம் தேதி வரை, 268.73 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு, இதே காலத்தின் கொள்முதலைவிட 21.58 சதவீதம் அதிகமாகும். இந்த கொள்முதல் மூலம் 22.84 லட்சம் விவசாயிகள், ரூபாய் 50736.53 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.
மேலும் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து ஆதரவு விலையில் 45.10 லட்சம் டன் பருப்பு கொள்முதல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் ராஜஸ்தானிலிருந்து கடந்த 11ஆம் தேதி வரை 54788.28 மெட்ரிக் டன் பாசி பயறு, உளுந்து, நிலக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம் 31865 விவசாயிகள் ரூபாய் 294.60 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெற்றுள்ளனர்.
இதே போல் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து 5089 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்,3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூபாய் 52.40 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைத்துள்ளது.