இறந்தவரின் சொத்தை அபகரித்த கிறிஸ்தவ பாதிரியார் - அலேக்காக தூக்கி சென்ற போலீசார்
இறந்தவரின் சொத்தை அபகரித்ததற்காக கிறிஸ்தவ பாதிரியார், பெண் ஊழியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
By : Bharathi Latha
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள தானேவில் இறந்த நபரின் 19.70 கோடி மதிப்பிலான சொத்தை போலியாக உருவாக்கி அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் மகாராஷ்டிர மாநிலம் தானே நகரைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார், பாரில் பணிபுரிந்த பெண் மற்றும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். போலி திருமண சான்றிதழ் மூலம் இறந்த ஒரு நபரின் மனைவி என்று கூறி அவருடைய சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதும் தெரியவந்து இருக்கிறது. மேலும் இந்த வழக்கு பற்றி அதிகாரிகள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அஞ்சலி அகர்வால், தாமஸ் ராமுல் கோட்பவார் மற்றும் மகேஷ் கட்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு பாரில் பணிபுரிந்த அகர்வால், 35 வயதான வாடிக்கையாளர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் நவம்பர் 2021 இல் அவர் இறந்த பிறகு, அகர்வால், மற்ற இரண்டு குற்றவாளிகளின் உதவியுடன், போலி திருமணச் சான்றிதழை உருவாக்கி, தானே நகரில் உள்ள கவேசரில் உள்ள அவரது சொத்தை ரூ.19.70 கோடியை அபகரித்தார்.
மேலும் இறந்த நபர் மீது அதிக சொத்துக்களை உடையவர் என்பதை அறிந்து கொண்டு அகர்வால் இந்த சதி திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார் மேலும் இவருக்கு உடந்தையாக கிறிஸ்துவ பாதிரியார் என்பவரும் ஈடுபட்டு இருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றப்பிரிவின் சொத்து பிரிவின் மூத்த ஆய்வாளர் மலோஜி ஷிண்டே கூறினார்.
Input & Image courtesy: News