Kathir News
Begin typing your search above and press return to search.

காதி இணையதளம் மூலம் மண் விளக்குகளுக்கு மாபெரும் விற்பனை வாய்ப்பு.!

காதி இணையதளம் மூலம் மண் விளக்குகளுக்கு மாபெரும் விற்பனை வாய்ப்பு.!

காதி இணையதளம் மூலம் மண் விளக்குகளுக்கு மாபெரும் விற்பனை வாய்ப்பு.!

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  7 Nov 2020 11:24 AM GMT

தீபாவளி சமயத்தில், காதியின் இணையதள விற்பனை, இந்திய மண்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வியாபார வாய்ப்பையும் பொருளாதார உதவியையும் வழங்கியுள்ளது .

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் அனுமன்கர் மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் உள்ள இந்த மண்பாண்ட தயாரிப்பாளர்கள் செய்த களிமண் விளக்குகள், காதி இந்தியாவின் இணையதளம் மூலமாக நாட்டின் மூலை முடுக்குகளை எல்லாம் சென்றடைகின்றன. இப்போது நன்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் நரேந்திரமோடி அரசின் உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் லட்சியத்தின் அடிப்படையில், இந்த வருடம், முதல் முறையாக, களிமண் விளக்குகளை இணையம் மூலமாகவும், கடைகளிலும் விற்க காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் முடிவெடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி முதல் களிமண் விளக்குகளை இணையதளம் மூலம் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்கத் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் கிட்டதட்ட 10 ஆயிரம் விளக்குகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன.

விற்பனை தொடங்கிய முதல் நாளில் இருந்தே காதியின் களிமண் விளக்குகளுக்கு அதிக தேவை இருப்பது தெரிய வந்தது. முதல் 10 நாட்களுக்குள் பெரும்பாலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் முற்றிலும் விற்று தீர்ந்து விட்டன. இதைத் தொடர்ந்து புதிய வகைகளிலான களிமண் விளக்குகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்க ஆரம்பித்த நிலையில், அவற்றுக்கும் அதிக அளவில் தேவை இருந்தது. தீபாவளி நெருங்கி வருவதால், விளக்குகளின் விற்பனை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எட்டு விதமான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகளை, 12 விளக்குகள் கொண்ட ஒரு தொகுப்புக்கு ரூ 84 முதல் ரூ 108 வரை என்னும் நியாயமான விலையில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் விற்பனை செய்கிறது. இவற்றின் மீது 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விளக்கின் விற்பனையிலும் நல்ல வருமானம் கிடைப்பதால் மண்பாண்ட உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். http://www.khadiindia.gov.in/ என்னும் இணைய தளத்தில் காதியின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் உள்ள மண் பொருள் கைவினைஞர்களும் இந்த முயற்சியை இப்போதே மேற்கொண்டால் கார்த்திகை தீபம் வரை நல்ல விற்பனை செய்யலாம். மண் விளக்குகளுக்கு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்திலும் அதிக வரவேற்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News